டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் பிட்ச் குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது.
இந்த பிட்ச் குறித்த சர்ச்சை விவகாரத்தில் ஐசிசி தலையிட்டுள்ளது.தற்போது இந்தியா களங்களுக்கு ரேட்டிங் அளித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணி உடனான பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது.
இதுவரை நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றிப் பெற்று முன்னிலையில் இருக்கிறது.
இத்தொடர் தொடக்கம் முதல் தற்போது வரை ஆஸ்திரேலியா அணி அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்துக்கொண்டு வருகிறது.
அது மட்டுமல்லாமல் இந்தியா பிட்ச் குறித்தும் பேசியது. இந்தியா பிட்ச் மிக மோசமாக இருப்பதாக கூறி வருகின்றனர்.
இந்த முறை ஆஸ்திரேலியா கூறியது போல் பிட்ச் இல் பெரிய அளவில் சுழல் ஏற்படவில்லை என்பது உண்மை.
ஆஸ்திரேலியா அணியின் தோல்விக்கு அவர்களுடைய அதிகப்படியான சிந்தனைகளும்,பிட்ச் எப்படி இருக்குமோ? என்ற பயமும் தான் காரணம். இவ்வாறு இந்தியா வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
அவர்களுடைய பேட்டிங் சொதப்பல்கள் தெளிவாக தெரிந்ததாகவும் கூறினார்.
இதனை அடுத்து ஐசிசி நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நடைபெற்ற டெல்லி மற்றும் நாக்பூர் பிட்ச்கள் இரண்டுமே சுமாரான களங்கள் என்று தெரிவித்தது.
இந்த ரேட்டிங் மேட்ச் நடுவரான ஆண்டி பைக்ராஃப்ட் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் தான் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தது.
ஐசிசி விதிப்படி பிட்ச் நேர்மையான முறையில் தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் இந்த 5 நாட்களில் ஒரு பிட்ச் இல்லை எனக் கூறப்பட்டிருக்கிறது.
இதைப்பற்றி ஐசிசி அதிகாரப்பூர்வமாக தகவலை அறிவிக்கவில்லை.
ஆனால் இதனை ஆஸ்திரேலியா ஊடகங்கள் வெளியிட்டு வருகிறது.
குறிப்பாக போட்டி நடுவரின் பரிந்துரைகளைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டு வருகிறது.