சிங்கப்பூரில் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு உதவ புதிய திட்டம்!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குறைந்த வருமானம் ஈட்டும் சுமார் 1700 குடும்பங்கள் சமூகம் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் IKEA ஆகியவற்றுக்கு இடையேயான மூன்று வருட ஒப்பந்தத்தின் மூலம் பயனடைகின்றன.
வீடு, வேலை மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் குடும்பங்களுக்கு உதவும் வகையில் நிறுவனம் ComLink திட்டத்தின் கீழ் 150,000 வெள்ளிக்கும் அதிகமான நிதியை வழங்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 6 வீடுகளை சீரமைக்க 60 சதவீத நிதி பயன்படுத்தப்படும்.
IKEA நிறுவனம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்க விரும்புகிறது.
இதனால் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பத்தினர் பயனடைவர்.
மேலும் நிறுவனம் சமூக சேவை அலுவலகங்களுடன் இணைந்து குடும்ப பிணைப்பு நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம் அங் மோ கியோ மற்றும் யீஷூன் பகுதிகளில் தொடங்கும், பின்னர் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow us on : click here