சிங்கப்பூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா...!! இதையெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சௌத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்நிலையில் கொடியேற்றம் ஆகஸ்ட் 5, 2024 அன்று வெகு விமர்சையாக தொடங்கியது. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தீமிதி திருவிழா வரும் அக்டோபர் 20, 2024 இல் நடைபெறும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
எனவே பக்தர்கள் பால்குடம், அங்கப்பிரதட்சணம், கும்பிடு தண்டம் போன்ற நேர்த்திக்கடனை செலுத்த விரும்புவோர் அதற்கான முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். அதற்கான முன்பதிவு வரும் அக்டோபர் 5 சனிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது.
மேலும் முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் அவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
கோவிலில் நடைபெறும் தீமிதி திருவிழாக்கான ஆன்லைன் பதிவு செப்டம்பர் 10 செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கி அக்டோபர் 19 சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் முடிவடையும்.
பக்தர்கள் கவனத்திற்கு:
*நிகழ்ச்சிக்காக முன்பதிவு செய்த பக்தர்கள் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசியின் குறுஞ்செய்தி வழி பணம் செலுத்தியது உறுதி செய்யப்படும்.
* முன்பதிவு செய்தவர்கள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக இருத்தல் வேண்டும்.
* மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் நிகழ்ச்சிக்கு வந்தால் போதும்.
* மிகவும் முன்னதாக வருபவர்கள் நிகழ்ச்சியில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
* தீக்குழி இறங்கும் ஆண் பக்தர்கள் மணிக்கட்டு மற்றும் கங்கணம் பெறுவதற்கான நேரங்களும் வழங்கப்பட்டுள்ளது.
* 16 முதல் 20 வயதுக்குட்பட்ட ஆண் பக்தர்கள் தங்கள் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலருடன் ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்குச் சென்று செப்டம்பர் 28, 2024 சனிக்கிழமை இரவு 7 மணி முதல் 9 மணி வரை முன்னதாகவே பதிவு செய்ய வேண்டும்.
மேலும் தகவல்களைத் தெரிந்து கொள்ள இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையத்தளம், முகநூல் பக்கத்தை அணுகலாம்.
Follow us on : click here