சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நோய் தொற்று பரவலுக்கு பிறகு, மக்கள் நலனைப் பாதுகாக்க கூடுதல் முயற்சிகளை எடுக்க வேண்டும். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர்.
மனநல தொடர்பான நிபுணத்துவ உதவி மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைகளை முன் வைத்தனர். கிருமி பரவல் காலகட்டம் மக்களுக்கு தனிமை, மனநலப் போராட்டம் முதலிய பிரச்சினைகளை விட்டு சென்றது.
இது போன்ற பிரச்சனைகள் நாட்டின் மீள்திறனை வலுப்படுத்தும் திட்டங்களை மெதுவாக செயல்பட செய்யும் என்றும் குறிப்பிட்டது. குடும்பங்களுக்கும் தனி நபர்களுக்கும் உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்தது.
நிபுணத்துவ உதவிக்குக் காத்திருக்கும் காலம் அதிகமாக இருக்கிறது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர் He Ting Ru குறிப்பிட்டார்.
மன உளைச்சல்,ஏக்கம் முதலியவைகள் தீய பாதைக்கு அவர்களைக் கொண்டு செல்லும் போக்கு குறைந்த வருமானம் ஈட்டுபவர்களிடையே காணப்படுவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதனால் மக்கள் எளிதில் உதவி நாடும் வகையில் புதிய நடவடிக்கைகள் தேவை என்று கூறினார்.
பொருளியலுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை சமூக மன நலத்திலும் செலுத்து எதிர்காலத்தை நோக்கி,`முன்னேறும் சிங்கப்பூர்´ போன்ற திட்டங்கள் நீண்ட காலம் பயணம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தது.