போதைப்பொருள் விற்பனை..!!!இளைஞருக்கு 5 ஆண்டுச் சிறைத் தண்டனை...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக மியான்மர் நாட்டைச் சேர்ந்தவரும்,சிங்கப்பூரின் நிரந்தரவாசியுமான 26 வயது மின் சோ டாட் எனும் இளைஞர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் சிங்கப்பூரின் முழு நேர தேசியச் சேவை பணியில் ஈடுபட்டு வந்தவர்.
கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 6 ஆம் தேதி, அவர் 50 கிராம் கஞ்சாவை 420 வெள்ளிக்கு வாங்கி, அதை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சாவை 6 பொட்டலங்களாக பிரித்துள்ளார்.
இவரிடம் 8 வாடிக்கையாளர்கள் போதைப்பொருளை அடிக்கடி வாங்குவதும் தெரிய வந்தது.
அதில் கிடைக்கும் லாபத்தை தனது சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மின் சோ டட்டின் வாடிக்கையாளர் ஒருவரை கைது செய்தனர்.
அதன்பின் ஒன்றரை மணி நேரம் கழித்து இராணுவ முகாமில் மின் சோ டாட்டை கைது செய்தனர்.
அவரது வீட்டில் நடத்திய சோதனையில் குறைந்தது 21.87 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
போதைப்பொருளை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக அவர் மீது 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இதனால் அவருக்கு 5 ஆண்டுச் சிறை தண்டனையும்,10 கசையடிகளும் விதித்து உத்தரவிடப்பட்டது.
Follow us on : click here