சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து வெளிவந்த புகை..!!! காரணம்..?
சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஜப்பானில் உள்ள நரீட்டா விமான நிலையத்தில் திங்கட்கிழமை( ஆகஸ்ட் 12) அன்று தரையிறங்கும்போது இன்ஜினில் இருந்து புகை வெளிவந்தது.
அதனால் விமான நிலையத்தின் ஓடுபாதை சுமார் 50 நிமிடங்கள் மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
SQ638 விமானத்தில் மொத்தம் 16 விமான ஊழியர்கள் மற்றும் 260 பயணிகள் என மொத்தம் 276 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
விமானத்திலிருந்து புகை வந்ததால் உடனடியாக தீயணைப்பு வாகனங்களும் அவசர உதவி வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
சுமார் ஒரு மணி நேரம் விமானத்தை தீயணைப்பு வீரர்கள் கண்காணித்தனர். அதன்பிறகு புறப்பட்டு சென்றனர்.
மேலும் இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகள் இச்சம்பவம் குறித்த காரணத்தை ஆராய்ந்தனர்.
விமானத்தில் இருந்து வெளியேறிய புகைக்கு அதன் வேகக் கட்டுப்பாட்டு விசையில்( பிரேக்) ஏற்பட்ட கோளாறு தான் காரணம் என்பது தெரிய வந்தது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பொறியியல் குழு விமானத்தின் சக்கரம் ஒன்றை மாற்றி பிரச்சனையை சரி செய்தது.
மேலும் வாடிக்கையாளர்களின் சிரமத்திற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது.
Follow us on : click here