செந்தோசா கடற்கரையில் புதிய பாதை...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் முதன்முறையாக செந்தோசாவில் சிறப்புத் தேவையுடையவர்களுக்கான பிரத்யேக கடற்கரை பாதையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய 23 மீட்டர் நீளப்பாதையானது எமரால்டு பெவிலியனில் இருந்து தொடங்கி சிலோசோ கடற்கரை வரை செல்கிறது.
இந்த புதிய முயற்சி ‘Beyond the Waves’ நிகழ்வில் தொடங்கப்பட்டது.
நடைபாதை ஆனது வழுக்காத மற்றும் உறுதியான மேற்பரப்பைக் கொண்டுள்ளதால் சிறப்பு தேவையுடையோர் , நடமாடச் சிரமப்படுவோர் என அனைவரும் வசதியாக செல்வதற்கு ஏற்ற வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கழிப்பறை உள்ளிட்ட பிற வசதிகளும் அருகிலேயே உள்ளன.
இந்த சிறப்பு வழித்தடம் இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி வரை சோதனை செய்யப்படும்.
நடைபாதைக்கு அருகில் மக்களின் கருத்துக்களை கேட்பதற்காக QR குறியீடுகள் அமைக்கப்பட்டிருந்தன.
பொதுமக்களின் கருத்துகள் சேகரிக்கப்பட்டு மற்ற கடற்கரைகளுக்கும் இது போன்ற வசதிகள் அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது .
Follow us on : click here