தேசிய தின அலங்காரத்தை சேதப்படுத்திய இளைஞர்..!! நடவடிக்கை எடுத்த காவல்துறை..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பாண்டன் தோட்டத்தின் புளோக் 404 திறந்தவெளி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரத்தை ஒருவர் வேண்டுமென்றே சேதப்படுத்தியதாக காவல்துறைக்கு கடந்த 6 ஆம் தேதி புகார் வந்தது.
சம்பவ இடத்தை கிளெமெண்டி பிராந்திய காவல்துறை விசாரணை செய்தனர்.
அப்போது தேசிய தின அலங்காரங்களை நாசப்படுத்தியதாகக் கருதப்படும் 23 வயது இளைஞரை காவல்துறை அடையாளம் கண்டனர்.
இளைஞரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் தேசிய தின கொண்டாட்டத்திற்காக அலங்கரிக்கப்பட்ட பூக்களில் வேறு எழுத்துக்களை சேர்த்து அதை அவருக்கு ஏற்றார் போல் மாற்றி உள்ளார்.
பின்னர் அதை படம் பிடித்த அவர் டிக்டாக்கில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
காவல்துறை அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தினர்.
பொது இடங்களில் இதுபோன்ற நாட்டுப்பற்று தொடர்புடைய அலங்காரங்களை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
இத்தகைய குற்றத்திற்கு அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம்.
Follow us on : click here