விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு...!! திரும்புவதில் சிக்கல்..!!
அமெரிக்காவைச் சேர்ந்த பேரி வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகிய இரு விண்வெளி வீரரும் இந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி விண்வெளிக்குச் சென்றனர்.
அவர்கள் எட்டு நாட்கள் விண்வெளி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
அவர்கள் சென்று இரண்டு மாதங்கள் ஆகியும் இருவரும் பூமிக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் அவர்களது பயணத்தில் எதிர்பாராத தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் பிப்ரவரி 2025 வரை அவர்களால் பூமிக்குத் திரும்ப முடியாது என்று நாசா தெரிவித்துள்ளது.
அவர்கள் பயணம் செய்த விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது .
மேலும் இரண்டு விண்வெளி வீரர்கள் தங்கள் போயிங் ஸ்டார்லைனரை சரி செய்ய முடியாவிட்டால் அடுத்த ஆண்டு வரை அவர்கள் விண்வெளியில் சிக்கிக் கொள்ளலாம் என்று நாசா தெரிவித்துள்ளது.
போயிங் ஸ்டார்லைனர் எனும் விண்கலம் பூமிக்குத் திரும்புவது பாதுகாப்பற்றதாகக் கருதப்பட்டால், பிப்ரவரி 2025 இல் SpaceX இன் க்ரூ டிராகனில் திரும்பலாம் என்று நாசா அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
க்ரூ டிராகன் பயன்படுத்தப்பட்டால், ஸ்டார்லைனர் கிராஃப்ட் எந்த குழுவினரும் இல்லாமல், கணினி கட்டுப்பாட்டின் கீழ் பூமிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நாசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Follow us on : click here