மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலவும் பதற்றம்!! விமான சேவையை ரத்து செய்த விமான நிறுவனம்!!
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகருக்கு செல்லும் விமானச் சேவையை ஏர் இந்திய நிறுவனம் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இது முதல் முறை அல்ல.
முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய போது டில்லி – டெல் அவிவ் விமானச் சேவை ரத்து செய்யப்பட்டது.
அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவியதால் 5 மாதங்கள் கழித்து தான் மீண்டும் விமானச் சேவை தொடங்கியதாக Hindustan times செய்தி வெளியிட்டது.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வருவதால் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தது.
அதன் விமானச் சேவையை மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்துள்ளதாக தெரிவித்தது.
ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுமையான தொகையும் திரும்ப வழங்கப்படும் என Air india நிறுவனம் தெரிவித்துள்ளது.
Follow us on : click here