விமான நிலையத்தில் பெட்டிகளை ஏற்றிச்செல்லும் இயந்திரத்தில் சிக்கிய பெண்!!

விமான நிலையத்தில் பெட்டிகளை ஏற்றிச்செல்லும் இயந்திரத்தில் சிக்கிய பெண்!!

அமெரிக்காவில் உள்ள Chicago O’Hare அனைத்துலக விமான நிலையத்தில் Conveyor Belt இல் சிக்கய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Conveyor Belt இயந்திரமானது பயணப் பெட்டிகளை ஏற்றிச் செல்லும் நகரும் இயந்திரம்.

உயிரிழந்த 57 வயதுடைய பெண் அங்கு பணிபுரியும் விமான நிலைய ஊழியர் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் அவரைப் பற்றிய மேல் தகவல்கள் வெளியிடப்படவில்லை.

சிக்காகோ தீயணைப்புத் துறைக்கு பெண் ஒருவர் பயணப் பெட்டிகளுக்கான நகரும் இயந்திரத்தில் சிக்கி மூச்சு விட முடியாமல் திணறுவதாக தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.

தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தன.இதனை BBC செய்தியில் தெரிவித்துள்ளது.

அப்பெண் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து விசாரணை நடைபெற்றது.அந்த பெண் ஆளில்லாத மற்றும் அங்கீகரிக்கப்படாத இடத்திற்குள் நுழைந்தது தெரிய வந்தது.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.