கண்ணாடி கோலிகளை வீசிய முதியவருக்குச் சிறை!!

கண்ணாடி கோலிகளை வீசிய முதியவருக்குச் சிறை!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மற்றவர்களின் உயிருக்கும் தனிப்பட்ட பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு 3 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம் செய்ததாக கருதப்படும் 61 வயதான லிம் லியோங் சிம் என்பவர் ஏப்ரல் 19 அன்று, வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது வந்த பறவைகளின் சத்தம் அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் வீட்டிற்கு அருகில் இருந்த மரத்தில் தான் அந்த பறவைகளின் சத்தம் வந்துள்ளது.

இதனால் லிம் வீட்டிலேயே கவண்வில்லைத் தயாரித்து அருகில் உள்ள மரத்தை நோக்கி கண்ணாடி கோலிகளை விட்டெறிந்தார்.

ஆனால் அது குறி தவறி பறவைகளைத் தாக்குவதற்குப் பதிலாக, ஜெங்குவா சமூக மன்றத்தின் கண்ணாடிப் பேழையை உடைத்தது.

சேதமடைந்த பேழையை அகற்றி, அதற்குப் பதிலாக புதிய பேழையை வைப்பதற்கான செலவு மட்டும் சுமார் 29,000 வெள்ளி ஆனது.

லிம்மின் வீட்டிற்கும் சமுதாயக் கூடத்திற்கும் இடையில் தான் அந்த மரம் இருந்தது.

போலீஸ் அதிகாரிகள் விசாரணைக்குப் பிறகு லிம்மை ஏப்ரல் 22 அன்று கைது செய்தனர்.

 

Follow us on : click here ⬇️