விடுப்புக்காக போலி இறப்பு சான்றிதழை கொடுத்த பெண்!!

விடுப்புக்காக போலி இறப்பு சான்றிதழை கொடுத்த பெண்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் போலி இறப்புச் சான்றிதழைப் பயன்படுத்தி கருணை விடுமுறையைப் பெற்றதாக பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நிரந்தரக் குடியுரிமை பெற்ற 37 வயதான சீனப் பிரஜையான சு சின் மருத்துவ விடுப்புக்காக போலி மருத்துவச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

சு சின் ETC சிங்கப்பூர் SEC லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

ஏப்ரல் 1ஆம் தேதி, செயின்ட் லூக்ஸ் மருத்துவமனை என்ற பெயரில் போலியான இ-மெடிக்கல் சான்றிதழை அவர் நிறுவனத்திடம் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.

 

அதன்பிறகு ஏப்ரல் 8-ம் தேதி அந்த நிறுவனத்துக்கு மற்றொரு போலி மருத்துவச் சான்றிதழைக் கொடுத்தார் என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இவர் தான் பணிபுரிந்த வேறொரு நிறுவனத்தில் போலி இறப்புச் சான்றிதழ் கொடுத்து கருணை விடுமுறை பெற்றதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.