போலி அஸ்தி கொடுத்து ஏமாற்றி வந்த தம்பதி!!
அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் இயங்கி வரும் The return to nature எனும் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்கும் அந்த நிறுவனம் போலி அஸ்தி கொடுத்து ஏமாற்றி வந்தது அம்பலமானது.
அமெரிக்காவில் இறந்தவர்களின் உடல் 24 மணிநேரத்தில் தகனம் செய்து அஸ்தியாக்க வேண்டும்.
இல்லையெனில் பதப்படுத்தி வைக்க வேண்டும்.
அந்த நிலையத்தின் உரிமையாளர்கள் ஜோன்,ஹால்ஃபோர்ட் என BBC செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த நிலையத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பலர் புகார் அளித்தனர். அதனை அடுத்து விசாரணை நடைபெற்றது.
உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் இதுவரை 190 பேரின் அழுகிய உடல்களை பதுக்கி வைத்திருந்தது மட்டுமல்லாமல் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு போலி அஸ்தியை கொடுத்து வந்தது அம்பலமாகியுள்ளது.
மேலும் சடலங்களை தவறாகப் கையாளுதல்,திருடுவது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுவது,ஏமாற்றுவது உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பிற குற்றங்களை ஹால்ஃபோர்ட் தம்பதியினர் எதிர்கொள்கின்றனர்.
அவர்கள் மீதான வழக்கில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சமந்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்றத்திற்கு வழக்கு வந்த போது அவர்கள் வரவில்லை.
கடுமையான பணத்தட்டுப்பாடு காரணமாக விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்த இயலவில்லை என்று கூறினர்.
இதனால் ஹால்ஃபோர்ட் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.அவரது மனைவியான ஜோன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் அவர்களுக்கு 950 மில்லியன் அமெரிக்க டாலர் (1,261,068,000 வெள்ளி)அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.
Follow us on : click here