நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டத்தில் உத்தரவாத தொகுப்புத் திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் வரவேற்கப்படுகிறதாக தெரிவித்தது.மூன்று பில்லியன் வெள்ளி இத்திட்டத்திற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படுவது அதில் ஒன்று.
சிங்கப்பூரர்கள் பணவீக்கம்,அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு,உயரும் பொருள் சேவை வரி முதலியவற்றைச் சமாளிக்க இந்த தொகுப்புத் திட்டம் உதவ முனையும் என்றும் குறிப்பிட்டது.
ஆனால், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த உதவிகள் நீண்டகாலத்துக்கு உதவாமல் போகலாம் என்று கூறினர்.
இன்னும் ஒரு சிலர் ஒவ்வொரு குடும்பங்களும் பெரும் உதவியின் அளவை மதிப்பீடும் முறையைப் பரிசீலிக்கவும் அழைப்பு விடுத்தனர்.
ஒரு சிலர் வசிக்கும் வீடுகளைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவைப்பட்டாலும் உதவி கிடைக்காமல் கூட போகலாம் என்றும் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.