சிங்கப்பூரில் `சதை உண்ணும்' பாக்டீரியா தொற்று நிலவரம்!!
சிங்கப்பூர்: Flesh-Eating Bacteria எனும் “சதை உண்ணும்” கிருமிகளால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலையாக இருப்பதாக சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது, சதை உண்ணும் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு வருடத்தில் சராசரியாக 80 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
இருப்பினும் இதனால் நோய் தொற்று ஏற்படவில்லை என்று திரு.ஓங் கூறினார்.
நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸ் என்பது ஒரு அரிதான, உயிருக்கு ஆபத்தான நோய் தொற்று ஆகும். இது நமது உடலின் தோல் மற்றும் மென்மையான திசுக்களை பாதிக்கிறது. இந்த நோய் பல வகையான கிருமிகளால் ஏற்படுகிறது.
அவை உடலின் மேற்பரப்பில் தோல், மூக்கு, தொண்டை அல்லது இயற்கை நீர்நிலைகளில் காணப்படும் ஒருவகை வைரஸ் ஆகும்.
பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் அல்லது தோல் வெடிப்பு உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் எளிதில் தாக்கி விடும்.
பச்சையாகவோ அல்லது சமைக்கப்படாத கடல் உணவையோ சாப்பிடுவது இந்த நோயை உண்டாக்கும்.
மேலும் மக்கள் நோயிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள முறையாக சமைக்காத உணவை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
Follow us on : click here