ஒலிம்பிக்கில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற பிலிப்பின்ஸ் வீரர்..!! பரிசு மழையில் தங்க மகன்..!!
பிலிப்பின்ஸுக்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற ஜிம்னாஸ்டிக் விளையாட்டு வீரர் கார்லோஸ் யுலோ இரண்டு தங்கப் பதக்கத்தை வென்றதைத் தொடர்ந்து மேலும் பல பரிசுகளை பெற உள்ளார்.
பிலிப்பைன்ஸ் அரசாங்கமும் சில நிறுவனங்களும் அவருக்கு மூன்று படுக்கையறைகள் கொண்ட கூட்டுரிமை வீடு, ஆயிரக்கணக்கான பணம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இலவச ramen நூடுல்ஸ் சாப்பிடுவதற்கான அனுமதி உட்பட பல பரிசுகளை வழங்க இருப்பதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
யுலோ இரண்டு வெவ்வேறு நாட்களில் இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றார்.
யுலோ செய்தியாளர்களிடம், நான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினேன். நான் பதக்கம் வெல்வேன் என்று நிச்சயம் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
யுலோவின் சாதனை குறித்து சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
இணையவாசிகள் சிலர் ஒலிம்பிக் போட்டியில் தொடர்ச்சியாக இரு நாள்கள் பிலிப்பின்ஸின் தேசிய கீதம் ஒலித்தது கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.இந்த தருணத்தை அடைவதற்கு 100 ஆண்டுகள் ஆனது.இந்தப் பெருமைக்குரிய, வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தத யுலோவிற்கு நன்றி எனக் கூறியுள்ளனர். சிலர் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுவருகின்றனர்.
Follow us on : click here
Instagram id : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook id : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram id : https://t.me/tamilansg