இன்ஸ்டாகிராம்,பேஸ்புக் பக்கத்தில் மலேசியா பிரதமரின் பதிவு நீக்கம்!!

இன்ஸ்டாகிராம்,பேஸ்புக் பக்கத்தில் மலேசியா பிரதமரின் பதிவு நீக்கம்!!

கடந்த வாரம் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொலை செய்யப்பட்டார்.

இஸ்மாயில் ஹனியே இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் தன்னுடைய Facebook,Instagram பக்கங்களில் பதிவிட்டிருந்தார்.

Facebook,Instagram இணைய தளங்களை நிர்வகிக்கும் meta நிறுவனம் அன்வாரின் பதிவுகளை நீக்கியது.

மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் தன்னுடைய பதிவுகளை நீக்கியதற்கான விளக்கம் கேட்டார்.

அப்பதிவுகளை நீக்கியதற்காக அன்வாரிடம் Meta நிறுவனம் மன்னிப்பு கோட்டுகொண்டது.

மேலும் ஏன் நீக்கப்பட்டது என மலேசியா கேள்வி கேட்டது.

அதற்கான விளக்கத்தை Meta நிறுவனம் இ-மெயில் வாயிலாக தெரிவித்துள்ளது.

அன்வாரின் பதிவு செயல்பாட்டு கோளாறு காரணமாக அப்பதிவு நீக்கப்பட்டதாக கூறியது. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

நீக்கப்பட்ட பதிவு அன்வாரின் பக்கத்தில் திரும்ப வெளியிடப்பட்டுள்ளதாக Meta நிறுவனம் கூறியது.

Meta நிறுவனத்தின் செயல்பாடுகள் பேச்சு உரிமை மற்றும் நியாயமற்றதாக இருப்பதாக திரு. அன்வாரின் அலுவலகம் கூறியுள்ளது..

 

Follow us on : click here 👇👇

Instagram id : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook id : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram id : https://t.me/tamilansg