பங்களாதேஷுக்கு விமான சேவையை ரத்து செய்த ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள்..!!
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஏற்படும் அமைதியின்மை காரணமாக இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் பங்களாதேஷுக்கு விமானச் சேவையை ரத்து செய்துள்ளது.
பங்களாதேஷில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கலவரங்கள் கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
பிரதமர் பொறுப்பில் இருந்த திருவாட்டி ஷேக் ஹசீனா ஆகஸ்ட் 5-ஆம் தேதி ராஜினாமா செய்தார்.
ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு திங்கள்கிழமை இந்தியா தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவரது வீடு முற்றுகையிடப்பட்டது.
அவர் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவின் திரிபுராவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷ் ராணுவ தளபதி ராணுவத்தின் ஆதரவுடன் விரைவில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது குறித்து ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பயணிகளை ஆதரிப்பதாகவும், அவர்களின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் ஏர் இந்தியா தெரிவித்தது.மேலும் அவர்களின் பாதுகாப்புக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானச் சேவை ரத்து செய்யப்படுவதால் பயணிகள் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதை நிறுவனம் புரிந்து கொள்வதாகவும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தொடர்ந்து உதவி வழங்கப்படும் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
Follow us on : click here
Instagram id : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook id : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram id : https://t.me/tamilansg