நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த 62 கடவுள் சிலைகள்..!! நடவடிக்கை எடுத்த ஜாலான் புசார் நகர சபை..!!
சிங்கப்பூர்: காலாங் பாருவில் உள்ள வீட்டு வசதி மேம்பாட்டுக் கழக வீட்டிற்கு வெளியே நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் முழுவதையும் அகற்றுமாறு ஜாலான் புசார் நகர சபை கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் பொருட்கள் நடைபாதையில் இருந்து அகற்றப்பட்டதை உறுதி செய்ய அதிகாரிகள் தொடர்ந்து சோதனை செய்வர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
புளோக் 64 காலாங் பாருவில் உள்ள ஐந்தாவது மாடி வீட்டிற்கு வெளியே நடைபாதையில் 62 சிலைகள் இருப்பதாக 8 வேர்ல்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்தது.
அதில் 6 மட்டுமே தனக்கு சொந்தமானது என வீட்டின் உரிமையாளர் ராஜா கூறியிருந்தார்.
சிலைகள் பற்றிய செய்தி வெளியானதும் நெட்டிசன்கள் கருத்து தெரிவிப்பதை தான் கவனித்து வந்ததாக கூறினார்.
மேலும் இந்தச் செய்தி நெட்டிசன்கள் மத்தியில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது என்று கூறினார்.
அவர் முதலில் நடைபாதையை சுத்தம் செய்வதாக கூறினார்.
சிலைகளை நான் என்ன செய்யப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை எனக்கு இதை அகற்றுவதற்கு உதவி தேவைப்படலாம் என்று ராஜா கூறினார்.
ராஜா 25 ஆண்டுகளாக அதே இடத்தில் வசித்து வருவதாகவும், அங்கு வசிக்கும் மக்கள் சிலை குறித்து இதுவரை எந்த ஒரு புகாரையும் கூறவில்லை என்று கூறினார்.
ஆனால் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் சிலர் தங்களுக்கு இடையூறுகள் இருந்தபோதிலும் தங்கள் வீடுகளுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள சிலைகள் மற்றும் பொருட்களை தாங்கள் பொறுத்துக் கொள்வதாக கூறியதாக 8World செய்தி யில் தெரிவித்துள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg