சிங்கப்பூரில் உள்நாட்டு தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 இளையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் மீது பயங்கரவாத தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஒருவர் வயது 15.இதுவரைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களில் மிக இளம் வயது உடையவர்.
தடுத்து வைக்கப்பட்டவர்கள் பிரபலமான சுற்றுப்பயண இடங்களில் முஸ்லீம் சார்ந்தவர்களாக இல்லாதவர்களை கத்தியால் குத்தி தாக்க திட்டமிட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் தற்கொலைத் தாக்குதல் நடத்தவும் திட்டம் தீட்டி உள்ளனர். தீவிரவாத சொற்பொழிவுகளைப் பரப்பும் சமூக ஊடகங்கள் மூலம் கடந்த 2022-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அதனைக் கேட்டுள்ளனர்.
அதன்பின் Al-Qaeda, ISIS தீவராத அமைப்புகளுக்கும் ஆதரவு அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 16 வயது இளையர் சிங்கப்பூர் உள்நாட்டு தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.இவருடைய 14 வயதாக இருந்த போது 2020-ஆம் ஆண்டில் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தார்.
இவருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். எச்சரிக்கை விடுத்திருந்தாலும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் ஆதரவு அளித்தும் , அவர்களுடன் கலந்துரையாடினார்.
இது போன்ற செயல்களில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.இவர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைப் பாவனைச் செய்யும் இணையதள விளையாட்டிலும் கலந்து கொண்டார்.
இந்த விளையாட்டில் எதிரிகளைக் கொலை செய்வது போன்ற அமைப்பு இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்குமுன் உள்நாட்டு தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட Muhammad Irfan Danyal Mohamad Nor க்கு இருவரும் அறிமுகமானவர்கள்.
இவர்கள் மூவரும் சமூக ஊடகங்களில் தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பக்கத்தில் அறிமுகம் ஆனதாக அதிகாரிகள் கூறினர்.
இந்த இரண்டு இளையர்களுக்கும் சமய ரீதியான ஆலோசனை மற்றும் மனோவியல் வழங்கப்படும்.இவர்களுக்கு மறுவாழ்வு பயிற்சியும் வழங்கப்படும்.