சிங்கப்பூரின் தேசிய தினத்தை சிறப்பிக்கும் வகையில் 59 கிலோமீட்டர் தூரம் ஓடி முடித்த குழு!!

சிங்கப்பூரின் தேசிய தினத்தை சிறப்பிக்கும் வகையில் 59 கிலோமீட்டர் தூரம் ஓடி முடித்த குழு!!

ஆகஸ்ட் 9-ஆம் தேதி சிங்கப்பூரின் தேசிய தினம் கொண்டாடப்படவுள்ளது.

அதனை சிறப்பிக்கும் வகையில் சிங்கப்பூரின் “ Happy Feet ” ஓட்டப்பந்தயக் குழு 59 கிலோமீட்டர் தூரம் ஓடியுள்ளது.

இந்த மாதம் 2-ஆம் தேதி தொடங்கி மறுநாள் ஆகஸ்ட் 3-ஆம் தேதி காலை 59 மீட்டர் தூரத்தை ஓடி முடித்தனர்.

இந்த குழுவில் மொத்தம் 45 பேர் இருந்ததாகவும், அவர்களில் 35 பேர் அந்த இலக்கை வெற்றிக்கரமாக கடந்ததாக 8 world செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தேசிய தினத்தை கொண்டாடுவதற்காக தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஓட்டத்தை குழு ஏற்பாடு செய்துள்ளது.