தெம்பனிஸ் பகுதியில் காகத்தால் மக்களுக்கு தொந்தரவு..!! காக்கை கூடுகளை அகற்றும் பணி தீவிரம்...!!
சிங்கப்பூர்: தெம்பனிஸ் பகுதியின் போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த பாராளுமன்ற செயலாளர் திரு. பே யாம் கெங் தெம்பனிஸ் பகுதியில் காகங்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த மாதம் புளோக் 485B தெம்பனிஸ் அவென்யூ 9ல் காகம் ஒன்று அப்பகுதியில் வசிக்கும் மக்களை தாக்கியதாக கூறப்பட்டது.
எனவே இச்சம்பவம் குறித்து திரு.கெங் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அச்சம்பவம் நடந்த மறுநாள் காலை தேசிய பூங்கா கழகம் அந்த இடத்திற்குச் சென்றது.
அங்கு இரண்டு காக்கைக் குஞ்சுகள் தரையில் கிடந்துள்ளது.
அவை கூடுகளிலிருந்து விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
உடனே குஞ்சுகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.
அதன் பிறகு காகங்கள் மக்களைத் தாக்குவதை நிறுத்தி உள்ளது.
பெரும்பாலும் காகங்கள் தனது குஞ்சுகளுக்கு ஆபத்தை உணரும் போது ஆக்ரோஷமாக செயல்படுவது இயல்பான ஒன்று தான்.
காகங்களினால் மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டு பிளாக் 485B இல் உள்ள கூடு மற்றும் மற்ற 3 கூடுகளையும் தெம்பனிஸ் நகரமன்றம் அகற்றியுள்ளது.
மேலும் 461 முதல் 470 வரையிலான தொகுதிகளைச் சுற்றியுள்ள மரங்களில் இருந்த 5 காகங்களின் கூடுகளும் அகற்றப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தெம்பனிஸ் தெருக்களில் 42 முதல் 45 வரையிலான பகுதிகளில் மட்டும் 77 காகங்களின் கூடுகள் நகரமன்றத்தின் உதவியுடன் அகற்றப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தேசிய பூங்கா கழகம் தெம்பனிஸ் பகுதியில் உள்ள காக்கை கூடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
Follow us on : click here
Instagram id : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook id : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram id : https://t.me/tamilansg