கடந்த 2022-ஆம் ஆண்டு சுகாதார அறிவியல் ஆணையம் சுமார் 640,000 வெள்ளி மதிப்புள்ள சட்ட விரோத சுகாதார பொருட்களைப் பறிமுதல் செய்தது. அதற்கும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 200,000 வெள்ளி அதிகம்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் Eczema எனப்படும் படை நோய்க்கான களிம்பு வகைப் பொருட்களே அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த 2022-ஆம் ஆண்டு இணைய விற்பனைத் தளங்களில் இருந்து அகற்றப்பட்ட பொருட்களில் இவை 43 விழுக்காடு.
இணைய விற்பனைத் தளத்திலிருந்து பாலியல் விழைவைத் தூண்டுபவை,வழி நிவாரணி, உடல் எடையை குறைக்க உதவும் பொருட்கள் போன்ற 477 சட்ட விரோத பொருட்கள் அகற்றப்பட்டன.
இது போன்ற பொருட்களைப் பயன்படுத்தியதால் பக்கவிளைவு ஏற்பட்டதாக 10 பேர் புகார் அளித்தனர். புகார் கொடுத்தவர்களில் மூன்று பேர் இளம் வயதுடையவர்கள் என்று சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது.
போலியான விளம்பரங்கள், போதிய தர கட்டுப்பாடு இல்லாதது போன்றவற்றை குறித்தும் சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரித்தது.