சிங்கப்பூரில் சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்களுக்காக நிபுணத்துவச் சுகாதார மையம் திறக்கப்பட்டுள்ளது. முதல் முறை ஆயுதப்படை வீரர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
இது கிராஞ்சி சுகாதார மையம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மையம் இரண்டு மாடி கட்டிடங்கள், பரந்த சேவைகளைக் கொண்டுள்ளது.
புதிய மையம் கிராஞ்சி முகாம் -3 இல் அமைந்துள்ளது. ஆயுதப்படை வீரர்களுக்காக முகாமில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளை விட இந்த புதிய மையத்தில் அதிக சேவைகள் இருக்கிறது.
ஆயுதப் படை வீரர்களுக்கு தேவையான பல் மருத்துவம், பயிற்சி வழி சிகிச்சை,மனநல ஆதரவு ஆகிய நிபுணத்துவ சேவைகள் இந்த புதிய மையத்தில் வழங்கப்படுகிறது.
அனைத்து பல்வேறு சேவைகளும் ஒரே இடத்தில் இருப்பதால் ஆயுதப்படை வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
ஒரு ஆயுதப்படை வீரர் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றால் அவர் பல்வேறு முகாம்களுக்குச் செல்ல வேண்டியதாக இருக்கும். அதற்கு இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகலாம்.
ஆனால், தற்போது இந்த புதிய மையம் திறக்கப்பட்டு இருப்பதால் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் வழங்கப்படுகிறது.
இதனால் வீரர் ஒரே நாளிலேயே அவருடைய பரிசோதனையை முடிக்கலாம். இந்த புதிய மையம் முகாமுக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது.
இந்த புதிய மையத்தில் பல புதிய அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒன்று MEDBOX.
MEDBOX என்பது மையத்திற்கு இருக்கும் ஓர் அறிவார்ந்த பெட்டக அமைப்பு.நோயாளிகள் தங்களுக்கான மருந்துகளை இந்த MEDBOX மூலம் பெறலாம்.
மருத்துவர்கள் தொலை ஆலோசனைச் சேவை வழி மூலம் நோயாளிகளைப் பரிசோதனை செய்வர்.
பரிசோதனைச் செய்த பின் அவர்களுக்கான மருந்துகள் வைக்கப்படும். இந்த சேவை மருந்திற்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைக்க வழிவகுக்கும்.
இதுபோன்ற சேவையால் தொற்றுநோய் பரவும் சூழ்நிலைக்கு சாத்தியம் இல்லை. இது போன்ற புதிய முயற்சிகள் சிகிச்சை அனுபவத்தோடு மட்டுமல்லாமல் சுகாதார பராமரிப்பு தரத்தையும் உயர்த்த பெரிதும் உதவுகின்றது.