Latest Sports News Online

Kopitiam 80-க்கும் அதிகமான ஊழியர்களைப் பணி அமர்த்த திட்டம்!

சிங்கப்பூரில் Kopitiam அதன் 15 கிளைகளில் 80 க்கும் அதிகமான ஊழியர்களை வேலையில் சேர்க்கப் போவதாக அறிவித்தது.இதனை FairPrice Group(FPG) தெரிவித்தது.

FairPrice Group(FPG) Kopitiam யை நிர்வகித்து வருகிறது.FairPrice செயலி Kopitiam அட்டையிலிருந்து சுலபமாக மாற புதிதாக பணி அமர்த்தப்படும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவுவர்.

இந்த சேவை மார்ச் மாதம் முதல் தேதியிலிருந்து ஜூன் மாதம் வரை வழங்கப்படும்.

FairPrice செயலிக்கு Kopitiam அட்டைகளில் உள்ள பண மதிப்பை Linkpoints வழி மாற்றிக் கொள்ளலாம்.

இதைச் சுயசேவை முகப்புகளில் செய்து கொள்ளலாம். பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கூடங்களும் அமைக்கப்படும்.வரும் மார்ச் மாதம் முதல் தேதி வரை Kopitiam அட்டைகளில் பணத்தை நிரப்பலாம்.

அதன் பின் ஜூன் 30-ஆம் தேதி வரை இவற்றைப் பயன்படுத்தி உணவையும் பானங்களையும் வாங்கிக் கொள்ளலாம்.

FairPrice செயலியை வைத்திருப்பவர்கள் Linkpoints பயன்படுத்தி உணவு மற்றும் பானங்களை வாங்கிக் கொள்ளலாம்.

ஏற்கனவே வாடிக்கையாளர்களுக்கு 10 விழுக்காடு விலையில் தள்ளுபடி வழங்கப்பட்டது.