Latest Tamil News Online

நியூசிலாந்தைப் புரட்டி போட்ட சூறாவளி! குடிநீருக்கு தட்டுப்பாடு!

நியூசிலாந்தில் எதிர்பார்க்காத அளவுக்கு சூறாவளி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.தற்போது அந்த பாதிப்புகளிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.

சுமார் 3,000 பேர் நிலைமை என்னவென்று தெரியவில்லை.

இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதுவரை Gabrielle சூறாவளியால் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

சூறாவளி பாதிப்பால் சில பகுதிகளில் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

அங்கு சாலைகளும், குழாய்களும் சேதமடைந்து இருப்பதால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் குடிநீர் தேவைப்படுகின்ற இடங்களுக்கு செல்ல கடும் சிரமமாக இருக்கின்றது.

Gisborne நீர் ஆலைகளின் இணைப்புக் குழாய் கட்டமைப்பில் சூறாவளி பாதிப்பால் முடங்கியுள்ளது.

இந்த நீர் ஆலைகள் இணைப்பு குழாய் வடக்குத்தீவில் இருக்கிறது.

குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்களுக்கு அறிவுரை அறிவுறுத்தப்பட்டது. மூத்தோர் நிலையங்கள், காப்பி கடைகள்,ஹோட்டல்கள், சலவை நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் தண்ணீரைச் சிக்கனமாக செலவழிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.