சர்ச்சைகளுக்கு பெயர் போன முன்னாள் வழக்கறிஞர் ரவிக்கு சிறை..!!

சர்ச்சைகளுக்கு பெயர் போன முன்னாள் வழக்கறிஞர் ரவிக்கு சிறை..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் முன்னாள் வழக்கறிஞர் M. ரவி என்பவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளன.

இதனால் நீதிமன்றம் அவருக்கு 14 வார சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் 5500 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

திரு.ரவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் கோயிலில் பூசாரியை தள்ளி காயப்படுத்தியது, துணை வழக்கறிஞர் இருவரை தாக்கியது, சைனாடவுன் கடையில் ஒருவரை அறைந்தது, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வரிசையில் நின்றோரை தள்ளிவிட்டு சென்றது, சௌத் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள உணவக ஊழியரை தள்ளியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது இருந்தாலும் தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இவருக்கு மனநிலை சார்ந்த சில பிரச்சனைகள் இருப்பதாக கூறப்பட்டது.

இதனால் 2018ல் மனநிலை பிரச்சனைக்கு அவர் கட்டாய சிகிச்சை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

இதனால் அவருக்கு வழக்கறிஞர் பணியை தொடர தடை விதிக்கப்பட்டது.

நீதிபதி வழக்கிற்கான தீர்ப்பை ஒத்திவைத்தார்.

தற்போது வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அவருக்கு மனநிலை பிரச்சனை இருப்பது தெரிந்தும் அதற்கான மருந்தோ சிகிச்சையோ அவர் இதுவரை எடுத்துக் கொள்ளவில்லை.இந்த வாதத்தை நீதிபதி ஏற்க மறுத்தார்.

அவரின் மனநிலை பிரச்சனையின் காரணமாக ஒரு சில குற்றங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.