சிங்கப்பூரில் நீர்நாய் கடித்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஆடவர்….!!

சிங்கப்பூரில் நீர்நாய் கடித்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஆடவர்....!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் டேவிட் அண்ட்ராடா என்பவர் தஞ்சோங் கடற்கரையில் ஜாகிங் சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் நீர்நாய் கடித்ததால் பலத்த காயம் அடைந்துள்ளார்.

இதனால் அவரின் உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்க கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆனதாக கூறப்பட்டது.

மூன்று வாரங்களுக்கு முன்னர் டேவிட் கடற்கரையில் ஜாகிங் செய்வதற்காக சென்றுள்ளார்.

அங்கு அவர் சில நீர் நாய்களை பார்த்துள்ளார். ஆனால் அவை அவர் இருக்கும் இடத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்துள்ளது.

நீர் நாய்கள் அந்த இடத்தை விட்டு நகரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்.ஆனால் அவர் எதிர்பார்ப்பிற்கு மாறாக நீர் நாய்கள் அவரை நோக்கி வந்தன.

நீர் நாய்களிடமிருந்து தப்பிக்க முயன்ற டேவிட் கீழே விழுந்துள்ளார்.

நீர்நாய் அவர் மீது பாய்ந்து விரலைக் கடித்ததில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. சிகிச்சைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குச் சென்றார்.அதிர்ஷ்டவசமாக நீர்நாய்களிடம் உயிர் தப்பி மருத்துவமனைக்கு சென்றதாக கூறினார்.

நீர் நாய்கள் கடித்ததில் அவரது தொடை மற்றும் காலின் பின்பகுதி, விரல்கள் என உடலில் சில இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

மேலும் நீர் நாய் கடித்ததில் அவர் தனது விரலை உணர முடியவில்லை என்று CNA செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அவரது விரலுக்கு மட்டும் மூன்று மணி நேர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவருக்கு பத்து தையல்களும்,tetanus தடுப்பூசியும் போடப்பட்டது.

டேவிட் என்பவருக்கு ஏற்பட்ட காயங்கள் குணமடைய கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை ஆகலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.