ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே இறப்பு குறித்து கவலை தெரிவிக்கும் சிங்கப்பூர்!!
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே இறப்பு குறித்து கவலை தெரிவிக்கும் சிங்கப்பூர்!!
சிங்கப்பூர்: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டது குறித்து சிங்கப்பூர் ஆழ்ந்த வருத்ததில் உள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இஸ்ரேல் மீது ஈரான் குற்றம் சாட்டிய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் இறுதிச் சடங்கு வியாழக்கிழமை தெஹ்ரானில் நடைபெற்றது.இஸ்மாயில் ஹனியேவின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மேலும் காஸாவில் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஹனியே ஈடுபட்டதால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சிகள் இப்போது தடைபட்டுள்ளதாக கூறினார்.
இதனால் பணயக்கைதிகளை விடுவிப்பதிலும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் இடையூறு ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காஸா மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினர் பதற்றத்தைத் தணிக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Follow us on : click here