பெண் விமானியின் வங்கி கணக்கை துடைத்த இணைய காதல்....!!
மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் பெண் விமானி ஒருவர் சமூக வலைதளங்களில் காதலில் சிக்கி 650,000 ரிங்கிட்டை (190,000 வெள்ளி) இழந்துள்ளார்.
அந்த நபருடன் 2 மாதங்களாக விமானி பேசி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணை வணிக திட்டத்தில் சேருமாறு கூறியுள்ளார்.
அந்த நபர் தன்னை சிங்கப்பூரர் என விமானிக்கு அறிமுகம் செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. மேலும் நபர் பெண்ணை அழகுசாதன முகவராக சேர அழைத்திருக்கிறார்.
இது நம்பகமான தொழில் என்றும், இதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இதனால் 30 வயதுடைய அந்த பெண் ஒரே மாதத்தில் 30 முறை பல வங்கிக் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்ததுள்ளதாக The Star இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தான் சேமித்த பணத்தை எல்லாம் கொடுத்து விட்ட பிறகும் அந்த ஆடவர் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார்.அப்போது தான் ஏமாற்றப்பட்டுள்ளதை அந்த பெண் விமானி உணர்ந்துள்ளார்.
Follow us on : click here