மலேசியாவில் சிங்கப்பூரர்களைக் குறி வைத்து மோசடி செய்ததாக தொடர்பில் இருந்தவர்களைக் கைது செய்தனர்.
12 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது.இதனை நேற்று சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.
சிங்கப்பூரில் மேலும் 14 பேர் கைது செய்யப்பட்டனர் அல்லது அவர்கள் விசாரிக்கப்பட்டனர் என்றும் கூறினர்.
இவர்கள் மோசடி கும்பல்களுக்கு உதவி செய்து, குற்றச் செயல்கள் மூலம் ஆதாயம் பெறுவதாகவும் நம்பப்படுவதாக காவல்துறை கூறியது.
பிப்ரவரி 10-ஆம் தேதி மலேசியா காவல்துறை திடீர் சோதனை நடத்தியது. இதில் 16 வயதுக்கும் 27 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் பிடிப்பட்டனர்.
இவர்கள் சிங்கப்பூரர்களின் எண்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இது போன்ற மோசடி செயல்களில் கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கியதாக காவல் துறைக் கூறியது.
முதற்கட்ட விசாரணையில், முன்கூட்டியே கட்டணத்தைச் செலுத்தும் Prepaid sim அட்டைகளைப் பயன்படுத்தி சிங்கப்பூரில் உள்ளவர்களுடைய தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மக்கள் 1.3 மில்லியன் வெள்ளிக்கு மேல் பணத்தை இந்த மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். இவ்வாறு சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.