பல முறை பிறப்பித்த உத்தரவை கடைபிடிக்க தவறிய நபருக்கு எச்சரிக்கை!!
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் 58 வயதுடைய நபர் Tik Tok காணொளிகளில் பொய்யான தகவல்களை பரப்பி வந்தார்.
அந்த நபர் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கும் ஆகஸ்ட் மாதத்திற்கும் இடையே பொய்யான தகவல்களை கொண்ட காணொளிகளை தனது டிக்டாக் பக்கத்தில் வெளியிட்டார்.
அந்த காணொளியில் வாக்களிப்பு ரகசியம், மத்திய சேமநிதித் திட்டங்கள், வீடமைப்பு வளர்ச்சி ,கழக வீடுகளின் விலை கட்டுப்படியானதா உள்ளிட்டவைகளைப் பற்றி பேசியுள்ளார்.
இது POFMA அலுவலக கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து அவருக்கு 24 மாதங்கள் நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக POFMA அலுவலகம் தெரிவித்தது.
அவருக்கு திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் அவர் அதனை பொருட்படுத்தாமல் நடந்து கொண்டார்.
அவருக்கு பல முறை திருத்த உத்தரவு நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
POFMA அனுப்பிய அறிக்கையையும் குறிப்பிட்ட தேதிக்குள் அவருடைய டிக்டாக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதையும் செய்ய தவறினார்.
மேலும் அந்த நபர் அவருடைய Tik Tok பக்கத்தின் பெயரை மாற்றியதாகவும்,
அதனால் பார்வையாளர்கள் திருத்த உத்தரவு அறிக்கையை காண முடியவில்லை என்று கூறியது.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட சமயத்திலும் மீண்டும் குற்றம் புரிந்தால், முன்னதாக புரிந்த குற்றங்களுக்கும் அவர் மீது குற்றஞ்சாட்டப்படும்.
அந்த நபரின் பெயரை POFMA தனது அறிக்கையில் குறிப்பிடவில்லை.
Follow us on : click here