சாங்கி விமான நிலையக் கடையில் திருட்டில் ஈடுபட்ட இந்தியா பெண்!!

சாங்கி விமான நிலையக் கடையில் திருட்டில் ஈடுபட்ட இந்தியா பெண்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடையில் திருடியதாக இந்தியாவைச் சேர்ந்த 23 வயதான டூடி மான்சி என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

திருடிய குற்றத்திற்காக அவருக்கு 500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

இச்சம்பவம் ஜூலை 17ஆம் தேதி நடந்துள்ளது.

அவர் விமான நிலையத்தில் உள்ள கடையில் 20 வெள்ளி மதிப்புள்ள லிப்ஸ்டிக்கை திருடியுள்ளார்.

கடை உரிமையாளர் அழகு சாதன பொருள் திருடப்பட்டது குறித்து போலீசாருக்கு புகார் அளித்தார்.

கடையில் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் ரகசிய கண்காணிப்பு கேமராவின் மூலம் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூரை விட்டு வெளியேறுவதற்குள் அவர் போலீசாரிடம் பிடிபட்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில்,அந்த பெண் அதே நாளில் மற்றொரு கடையில் 135 வெள்ளி மதிப்புள்ள அழகுசாதனப் பொருட்களை திருடியது தெரியவந்தது.

காவல்துறையினர் கடை திருட்டு சம்பவங்களை கடுமையானதாக கருதுகின்றனர். எனவே இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.