இசை நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட இளவரசி…! கடைசியில் நடந்த ட்விஸ்ட்….!

இசை நிகழ்ச்சிக்கு அழைத்துவரப்பட்ட இளவரசி...! கடைசியில் நடந்த ட்விஸ்ட்....!


சிங்கப்பூர்: சிங்கப்பூரர் ஒருவர் தன் மகளை இளவரசி என்று கூறி இசை நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த ஜனவரி மாதம் 20,21 ஆகிய தேதிகளில் Enhypen K-pop என்ற
இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த இசை நிகழ்ச்சிக்கு தன் மகளை அழைத்துச் செல்வதற்காக அவரை இளவரசி என்று கூறியுள்ளார்.

மேலும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் முன்னதாகவே தொடர்பு கொண்டு தான் சிலாங்கூர் இளவரசியை அழைத்து வருவதாக கூறியுள்ளார்.

நிகழ்ச்சிக்கு வந்த அவர்,இவர் தான் மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த இளவரசி என்றும், நான் தான் அவரது தனிப்பட்ட மெய்க்காப்பாளர் என்றும் கூறியுள்ளார். இவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த ஏற்பாட்டாளர் காவல்துறையிடம் புகார் தெரிவித்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர் குற்றம் செய்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும் அவர் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும், தனது மகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் அவர் அவ்வாறு கூறியதாக தெரிவித்தார்.

அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

ஆள்மாறாட்டம் செய்த குற்றத்திற்காக 49 வயது மதிக்கத்தக்க ஆடவர்க்கு 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

ஆள்மாறட்ட குற்றத்திற்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.