கலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீ!! போராடும் தீயணைப்பு வீரர்கள்!!

கலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீ!! போராடும் தீயணைப்பு வீரர்கள்!!

அமெரிக்காவின் வட கலிபோர்னியாவின் சில பகுதிகளில் காட்டுத்தீ மோசமாக பரவி வருகிறது.ஒரு மணி நேரத்திற்கு 20 சதுர கி.மீ வரை தீயானது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த காட்டுத்தீ பூங்காவில் புதன்கிழமை அன்று தீ மூண்டதாக கூறப்படுகிறது.

இந்த காட்டுத்தீப் பரவ காரணமாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் 42 வயதுடைய நபர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.அந்த நபர் பட் கவுண்டியில் பகுதியில் உள்ள அலிகேட்டர் ஹோல் அருகே எரிந்து கொண்டிருந்த காரை பள்ளத்தாக்கில் உருட்டி விட்டதே இந்த மோசமான காட்டுத்தீக்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

பரவிய தீயை அணைக்க சுமார் 3,700 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.தீ அணையாமல் மேலும் அதிகமாக பரவி வருவதாகவும் கூறுகிறது.

சிக்கோவின் வடகிழக்கில் 350,000 ஹெக்டருக்கும் அதிகமான நிலப்பகுதிகள் தீக்கு இரையாகியுள்ளது.

மேலும் பல கட்டுமானங்கள் எரிந்து நாசமானது.

தீயின் காரணமாக 7 மாவட்டங்களில் உள்ள மக்கள் தங்கள் இடங்களை விட்டு வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 10% விழுக்காடு மட்டுமே தீ அணைக்கப்பட்டுள்ளதாக மாநிலத்தின் தீயணைப்பு நிறுவனம் தெரிவித்தது.