விதியை மீறிய வீட்டு உரிமையாளர்களுக்கு தண்டனை!!
உயரமான மாடியில் இருந்து கீழே குப்பையை வீசிய இரண்டு வீட்டு உரிமையாளர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் உயரமான தளத்திலிருந்து அடிக்கடி குப்பைகள் கொட்டப்படுவதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பிற்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து புகார் பெறப்பெற்ற இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.
எந்த வீடுகளிலிருந்து குப்பைகள் வீசப்படுகிறது என்பதை கேமரா படம்பிடித்தது.
குறிப்பிட்ட வீட்டில் இருந்து குப்பை வீசப்பட்டால் வீட்டின் உரிமையாளருக்கு தண்டனை விதிக்கப்படும். இந்த புதிய நடைமுறை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதி அமலுக்கு வந்தது.
இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தது முதல் இரண்டு பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெடோக் பகுதியில் 63 வயதுடைய நபர் தனது வீட்டில் உள்ள வீட்டுக் கழிப்பறையில் இருந்து குப்பையை வீசினார். இந்த சம்பவம் கடந்த மாதம் 11-ஆம் தேதி நடந்தது.
மறறொரு நபர் ஆங் மோ கியோ பகுதியில் 42 வயதுடைய பெண் தனது வீட்டு சமையல் அறையிலிருந்து உணவு கழிவுகளை வீசினார்.
முதல்முறையாக குற்றம் புரிந்த இரண்டு வீட்டு உரிமையாளர்களுக்கும் 700 வெள்ளி அபராதமாக விதிக்கப்பட்டது.
Follow us on : click here