செங்காங் மருத்துவமனை அருகே பெண்ணின் மீது மோதிய கார்!!
சிங்கப்பூர்: செங்காங் மருத்துவமனைக்கு அருகில் 39 வயது மதிக்கத்தக்க பெண்ணை கார் ஒன்று மோதியது.
இந்த விபத்து செங்காங் ஈஸ்ட் பாதையில் நடந்தது.
இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் காயமடைந்த பெண் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
விபத்தை ஏற்படுத்திய 72 வயது கார் ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்தது.
இச்சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.
Follow us on : click here