சிங்கப்பூரில் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைப் பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு இந்து அறக்கட்டளை வாரியம், ஸ்ரீ சிவன் ஆலயத்தின் மேலாண்மைக் குழு ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்தனர்.
நிகழ்ச்சி நேற்று இரவு 7 மணியளவில் நடைபெற ஆரம்பித்தது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சுகாதார அமைச்சர் Ong Ye Kung கலந்து கொண்டார்.
பக்தர்கள் தங்கள் காணிக்கையானபால்குடத்தை நேற்று இரவு 7.00 மணிக்கு முதல் இன்று காலை 4.00 மணி வரை எடுக்கலாம் என்று நிர்வாகம் அறிவித்து இருந்தது.
பக்தர்களைச் சமாளிக்க சுமார் 200 தொண்டூழியர்களை ஏற்பாடு செய்யப்பட்டது.