வரவு செலவுத் திட்டத்தில் சிங்கப்பூரர்களுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.எவ்வளவு மானியங்களும்,வழங்குத்தொகையும் கொடுக்கப்படும் என்பதைக் கண்டறிய புதிய இணையக் கணிப்பான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிதியமைச்சகமும்,GovTech எனும் அரசாங்கத் தொழில்நுட்ப ஆணையமும் இணைந்து உருவாக்கி உள்ளன.
பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி வரவு செலவு திட்டத்தை துணைப் பிரதமருமான, நிதி அமைச்சருமான Lawerence Wong வெளியிட்டு இருந்தார்.
வரவு செலவுத் திட்டத்தில் வெளியிடப்பட்ட திட்டங்களைப் பற்றியும், அவற்றின் மானியங்களைப் பற்றியும் கணிக்கச் சிலருக்கு சிரமமாக இருக்கலாம் என்பதற்காக கணிப்பான் உதவும் என்று Lawerence Wong அவருடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
சிங்கப்பூரர்களுக்குக் கிடைக்கும் சலுகைகளை Support For You எனும் கணிப்பான் பட்டியலிட்டுக் காட்டுகிறது.