சிங்கப்பூரில் இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பை மிக அருகில் காணலாம்!!
சிங்கப்பூர்: தேசிய தின அணிவகுப்பை இந்த ஆண்டு பார்வையாளர்கள் மிக அருகில் இருந்து கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முறை ரசிகர்களை கொண்டாட்டத்தின் உற்சாகத்தில் திகைக்க வைக்க படைப்பாளிகள் பல மேடைகளை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 300 படைப்பாளிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.
இதில் 360 டிகிரி சுழற்றக்கூடிய உயரமான மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய நாளாக கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு தனது 59 பிறந்த நாளை கொண்டாடும் சிங்கப்பூர் ஏராளமான மக்களை ஒன்றிணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதில் ராணுவ அணிவகுப்பு,வான வேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை அடங்கும்.
ஜூலை 12 முதல் குடியிருப்பு பகுதிகளில் கொண்டாட்டங்களுக்கான டிக்கெட்டுகள் சமூக மையங்களில் இலவசமாகக் கிடைக்கும்.
ஒவ்வொரு நபரும் இரண்டு டிக்கெட்டுகள் வரை பெறலாம். 100,000 டிக்கெட்டுகள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கிடைக்கும்.
தேசிய தின அணிவகுப்பு அங்கம்’ஒன்றுபட்டு நிற்போம் ‘என்ற தலைப்பில் இடம்பெறவுள்ளது.பரந்த திடலில் நடைபெற உள்ள கொண்டாட்ட நிகழ்ச்சியில் தேசத்தைக் கட்டியெழுப்பும் ஒற்றுமையைக் குறிக்கும் பாடலின் போது தேசிய மலர் மலர்வது மேடை அங்கத்தின் முக்கிய அம்சமாகும்.
மேடையில் மிதக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த 20 மீட்டர் கப்பல், ஆரம்பகால குடியேறிகளை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.இது முன்னோடிகளின் உணர்வைப் பாராட்டும் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரின் கூட்டுப் பலம், பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை இந்த நிகழ்ச்சி எடுத்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Follow us on : click here