நிதானத்தை இழந்ததால் நிம்மதியை இழந்த முதியவர்!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சிவப்பு விளக்கு கேமராவில் பதிவான வேக வரம்பை மீறிய குற்றத்திற்காக 60 வயது முதியவருக்கு நீதிமன்றத்தால் 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 15 மாதங்களுக்கு வாகனம் ஓட்டவும் தடை விதித்துள்ளது.
சிவப்பு விளக்கு கேமராக்களில் வேக கண்காணிப்பு அம்சம் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது.ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
அதன்பிறகு, 5,000க்கும் மேற்பட்ட அதிவேக விதிமீறல்களை கேமராக்கள் பதிவு செய்துள்ளன.
சிவப்பு விளக்கு கேமராவில் பதிவான வேக வரம்பை மீறியதற்காக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.
ஏப்ரல் 9 ஆம் தேதி மதியம் 12.40 மணியளவில், அவர் வாகனத்தை வெஸ்ட் கோஸ்ட் நெடுஞ்சாலை பகுதியில் வேகமாக ஓட்டியுள்ளார்.அவர் 70 கிமீ வேக வரம்பு கொண்ட சாலையில் மணிக்கு 111 கிமீ என்ற வேகத்தில் சென்றுள்ளார். இது சிவப்பு விளக்கு கேமராவில் பதிவானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சாலையில் வேகத்தை மீறி ஓட்டுவது ஆபத்தானது என்று தெரிந்தும் சிலர் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது நமக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து சாலை விதிகளை முறையாக கடைப்பிடித்து ஓட்டுவது என்றும் நன்மையை அளிக்கும்.
Follow us on : click here