மூக்கில் புற்றுநோய் இருந்தாலும் வாழ்க்கையை ரசிக்கும் இளைஞர்...!
சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த இக்னேஷியஸ் லிம் என்பவர் மூக்கில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு (2023) அடிப்படை ராணுவப் பயிற்சியின் போது, திடீரென அவரது காதில் ஒரு கூச்ச உணர்வு இருந்தது.முதலில் இக்னேஷியஸ் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டார். ஆனால் நாளடைவில் அந்தப் பிரச்சனை பெரியதாகி அவர் வலது காது முற்றிலும் கேட்கும் திறனை இழந்துள்ளது.
இதனால் அவரது 19 வது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்பு, புதிய தொடக்கம் புது பொலிவுடன் இருக்க வேண்டும் என்று நினைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது தான் அவருக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு உண்மை தெரிய வந்துள்ளது.
அவரின் மூக்கில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.முதலில் அதை ஏற்றுக் கொள்ள மனம் தயங்கினாலும் நம்பிக்கையுடன் அதை ஏற்று இனி வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் அனுபவித்து வாழ வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
புற்றுநோயால் இக்னேஷியஸ் தம் அன்றாட வாழ்வில் பல இன்னல்களை அனுபவித்ததாக கூறினார். அவருக்கு புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் இல்லை. அவரது குடும்பத்தில் யாரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதில்லை.
இக்னேஷியஸ் மருத்துவரின் ஆலோசனைப்படி மூக்கில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இக்னேஷியஸ் கிச்சைக்கு பின் எழுந்து நடக்க கூட முடியாமல் தவித்தார்.இருப்பினும், இக்னேஷியஸ் மனம் தளரவில்லை.
வாழ்க்கையில் ஒரு புதிய பார்வை அவருக்கு பிறந்தது. “என் வாழ்க்கையில் நான் செய்ய விரும்பும் அனைத்தையும் செய்ய இதுவே சிறந்த நேரம்” என்று இக்னேஷியஸ் கூறினார். இக்னேஷியஸ் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக புது நம்பிக்கை கொண்ட மனிதராக அடுத்த மாதம் தனது 20வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
Follow us on : click here