சிங்கப்பூருக்குள் பலரும் வர விரும்புவர்.வர விரும்புவோர்களில் ஆள் மாறாட்டம் செய்து வரலாம் என்று நினைப்பவர்களும் உண்டு.
கடந்த ஆண்டு ஆள் மாறாட்டம் செய்து சிங்கப்பூருக்குள் நுழைய முனைவோரின் எண்ணிக்கை மடங்கு அதிகரித்ததாக குடி நுழைவு, சோதனை சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.
அதன் மடங்கு 15 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்தது.
கடந்த 2022 ஆம் ஆண்டில் ஆள்மாறாட்டம் செய்து சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றோர் 441.
அதேபோல் 2021-ஆம் ஆண்டு ஆள் மாறாட்டம் செய்து சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றோர் 28.
சோதனை சாவடிகளில் பயணிகளின் கைரேகை,முகம்,கருவிழி படல அடையாளம் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஆள்மாறாட்டம் செய்யும் முயலும் பயணிகளை எளிதாக கண்டுபிடிக்க முடிகிறது என்று ஆணையம் கூறியது.
கடந்த 2022-ஆம் ஆண்டு சோதனை சாவடிகளை 105 மில்லியன் பயணிகள் கடந்தனர்.
2021-ஆம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 6 மில்லியன்.
கடந்த 2022-ஆம் ஆண்டு போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றோர் எண்ணிக்கை 21.
அதேபோல் 2021-ஆம் ஆண்டில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றோர் எண்ணிக்கை 1.
சிங்கப்பூரில் கடந்த 2022-ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட காலத்துக்கு மேல் தங்கி இருந்தோர் எண்ணிக்கை 357.
அதேபோல் 2021– ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் தங்கி இருந்தோர் எண்ணிக்கை 299.
சிங்கப்பூரில் கடந்த 2022-ஆம் ஆண்டு சட்ட விரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கை 57.
2021-ஆம் ஆண்டில் சட்ட விரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கை 56.
தற்போது நில சோதனைச் சாவடிகளில் பயணிகளின் எண்ணிக்கை கிருமி தொற்று காலத்திற்கு முந்தைய நிலைக்கு திரும்பும் வேளையில் அமலாக்க நடவடிக்கைகள் குற்றச் செயலைக் குறைக்க உதவுகிறதாக ஆணையம் கூறியது.