கடந்த மாதம் ஆண்டு அடிப்படையில் சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி 25 விழுக்காடு சரிவு கண்டுள்ளது.
தொடர்ந்து நான்காவது மாதமாக ஏற்றுமதி குறைந்தது.
மின்னியல் மற்றும் மின்னியல் சாரா பொருட்களின் ஏற்றுமதி குறைந்துள்ளது.
சென்ற டிசம்பர் மாதம் எண்ணெய் சாரா ஏற்றுமதி 20 விழுக்காட்டுக்கு மேல் குறைந்துள்ளது.
கடந்த மாதம் முக்கிய 10 சந்தைகளுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதிகளும் குறைந்துள்ளது.
குறிப்பாக சீனா,அமெரிக்கா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கான ஏற்றுமதிகளும் சரிந்தது.
ஜப்பானுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி கூடியது.
ஜனவரி மாதத்தில் மொத்த வர்த்தகம் சரிந்தன.இறக்குமதிகளும், ஏற்றுமதிகளும் குறைந்தன.