காஸாவிற்கு நிவாரண பொருட்களை மீண்டும் அனுப்பியுள்ள சிங்கப்பூர்!!

காஸாவிற்கு நிவாரண பொருட்களை மீண்டும் அனுப்பியுள்ள சிங்கப்பூர்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசு நான்காவது தொகுதி நிவாரணப் பொருட்களை காஸாவிற்கு அனுப்புயுள்ளது.

பாலஸ்தீன மக்களுக்கு உதவும் வகையில் 17 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான மதிப்புள்ள உணவுப் பொருட்களை வழங்கியுள்ளது.

அங்கு போர் தொடர்ந்து நடைபெறுவதால் அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே அவர்களுக்கு உதவும் வகையில் சிங்கப்பூர் அரசு தொடர்ந்து நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது.

அந்த வகையில் நான்காவது கட்டமாக ஹலால் முத்திரையுடன் கூடிய கொள்கலன்களில் அடைக்கப்பட்ட 300 டன் மத்தி மீன், ஆயிரம் டன் அரிசி போன்றவற்றை சைப்ரஸ் வழியாக காஸாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் இது சாத்தியமானது.