Latest Singapore News

சிங்கப்பூரில் புதிய சிந்தனைகளுக்கான பசுமை அலை விருது நிகழ்ச்சி!

சிங்கப்பூரில் Sembcorp Marine நிறுவனம் பசுமை அலை போட்டி விருது நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது.

இந்நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் Chan Chung Sing கலந்துக் கொண்டு பேசினார்.

சுற்றுப்புறத்தைக் காப்பது குறித்து இளையர்களுக்குக் கற்றுத் தருவதில் முனைப்புக் காட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

கல்வி நிலையங்களோடு நிறுவனங்கள் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.

இனி வர போகின்ற தலைமுறைகளுக்கு இன்றைய இளைய தலைமுறையின் உதவியோடு தூய்மையான சுற்றுப்புறத்தை விட்டு செல்ல முடியும் என்றும் கூறினார்.

மாணவர்களின் பல புதுமையான திட்டங்கள் விருது பெற்றன.பசுமையைக் காக்க உதவும் புதிய சிந்தனைகளை வழங்கும்படி Green wave பசுமை அலை விருது மாணவர்களைத் தூண்டுகிறது.

இந்த போட்டி இருபது ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.இந்த 2023-ஆம் ஆண்டு போட்டியில் 18 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.