கேரளாவில் மீண்டும் தலைத்தூக்கும் நிபா!! பலியான 14 வயது சிறுவன்!!

கேரளாவில் மீண்டும் தலைத்தூக்கும் நிபா!! பலியான 14 வயது சிறுவன்!!

இந்தியாவில் உள்ள கேரளா மாநிலத்தில் 14 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்து.

அதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.வைரஸ் தொற்று அபாயம் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அச்சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்ததாக கேரளா சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.

அச்சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சோதனை செய்ததாகவும் தெரிவித்தார்.

60 பேருக்கு தொற்றுக்கான அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் அதிக ஆபத்து பிரிவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அச்சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான்.

உள்ளூர் மருத்துவமனைகளில் சிறுவனின் குடும்பத்தினர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.

தொற்றுப் பாதிக்கப்படும் நோயாளிகளுக்காக தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


நிபா வைரஸ் பன்றிகள், வௌவால்கள் மூலமாக பரவக்கூடியது. இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானது.

வைரஸ் தொற்று தடுப்பதற்கான மருந்தும் இல்லை. மேலும் குணப்படுத்துவதற்கான சிகிச்சையும் இல்லை.

பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் பரவக்கூடியது.

வைரஸ் தொற்று தாக்கியவுடன் மனிதர்களின் மூளையை தாக்கி வீங்கச் செய்யும். அதன்பின் காயச்சலை ஏற்படுத்தும்.

பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும்
மருத்துவமனைக்கு செல்வதை மக்கள் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.