நூதனமுறையில் சிங்கப்பூரை விட்டு வெளியேற முயன்ற மலேசியர்!!

நூதனமுறையில் சிங்கப்பூரை விட்டு வெளியேற முயன்ற மலேசியர்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இருந்து சட்டவிரோதமாக வெளியேற முயன்ற மலேசியர் ஒருவர் ஜூலை 19-ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஜூலை 19 நண்பகல் 12 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது.

மலேசியப் பதிவு எண் கொண்ட லாரியைச் துவாஸ் சோதனைச் சாவடியில் சோதனை செய்த சிங்கப்பூர் குடிநுழைவு,சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

44 வயதான மலேசியர் ஒருவர் லாரியை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.மேலும் 32 வயது மதிக்கத்தக்க மலேசியர் ஒருவர் லாரிக்குள் மறைந்து இருந்ததாகவும் அவரிடம் முறையான பயண ஆவணங்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைவதையும் அல்லது சட்டவிரோதமாக வெளியேறுவதையும் தீவிரமாகக் கருதுகிறது.

சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைந்த குற்றத்திற்கு 6 மாத சிறைத்தண்டனையும் குறைந்தபட்சம் 3 பிரம்படிகளும் விதிக்கப்படும்.

சட்டவிரோதமாக சிங்கப்பூரை விட்டு வெளியேறினால் அதிகபட்சமாக 1,000 வெள்ளி அபராதம், 6 மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தடைசெய்யப்பட்ட குடியேற்றவாசிகளை சிங்கப்பூருக்கு வெளியே கொண்டு செல்லும் குற்றத்திற்கு 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் குறைந்தபட்சம் 3 பிரம்படிகளும் விதிக்கப்படும். மேலும் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.