பங்களாதேஷில் உள்ள சிங்கப்பூரர்களுக்கு அறிவுரை!!

பங்களாதேஷில் உள்ள சிங்கப்பூரர்களுக்கு அறிவுரை!!

சிங்கப்பூர்:
பங்களாதேஷில் தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

சிங்கப்பூரர்கள் பங்களாதேஷூக்கு பயணங்களை ஒத்திவைக்குமாறு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

பங்களாதேஷில் கடந்த சில தினங்களாக அரசுப் பணிகளுக்கான இடஒதுக்கீடு முறைக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தப் போராட்டத்தின் விளைவாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் காவல்துறையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகத்தின் அறிவுரை வந்துள்ளது.

பங்களாதேஷில் உள்ள சிங்கப்பூரர்கள் https://eregister.mfa.gov.sg என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

பங்களாதேஷில் உள்ள சிங்கப்பூரர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அவர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கவும், உள்நாட்டு செய்திகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் உள்நாட்டு அதிகாரிகளின் உத்தரவை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூதரக உதவி தேவைப்படுபவர்கள் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் அல்லது பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.